• Jan 15 2025

Good Bad Ugly படத்தின் ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..? வெளியான புதிய அறிவிப்பு

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியானது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.  இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிஸியாக நடித்த வருகின்றார் அஜித். இதில் விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

d_i_a

இன்னொரு பக்கம் கார், பைக் ரைசிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு துபாயில் இடம் பெற்ற 24 ஹவர்ஸ் கார் ரேசிங்கில் மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இனிமேல் ரேசிங் சீசன் நடைபெறும் மாதங்களில் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்திருந்தார்.


குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்படுகின்றார், அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதோடு அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், ஆதித் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகைக்கு கைப்பற்றி உள்ளதாம். மேலும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement