• Apr 07 2026

‘தாய் கிழவி’ பிரீமியர் ஷோவில் என்ட்ரி கொடுத்த பிரபல ஜோடி.. SK செய்த காரியம் வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவருடைய தயாரிப்பில் நாளைய தினம் ராதிகா நடிப்பில் உருவாக்கியுள்ள 'தாய் கிழவி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் பிரீமியர் ஷோவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.

இதன்போது திரைப்படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் நேரில் சென்று சூர்யா – ஜோதிகா தம்பதியினரை அன்புடன் கட்டியணைத்து வரவேற்றது நிகழ்ச்சியின் சிறப்பு தருணமாக அமைந்தது.


திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் இந்த தம்பதியினரின் பங்கேற்பு, ‘தாய் கிழவி’ திரைப்படத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது. 


தாய் கிழவி படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் அவர்களின் வருகை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

Advertisement

Advertisement