• Dec 25 2024

கடலுக்குப் போன அப்பா திரும்பல...பல வருட காதலி...சில மணிநேரத்தில் வேறொருவருடன் ஓட்டம்..கண்கலங்கிய சரிகமபா நாகார்ஜுனா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 3 போட்டியாளராக நாகார்ஜுனா கலந்து கொண்டிருந்து தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவருக்கு ஆரம்பத்தில் இருந்து சங்கீதம் பற்றி அறிவு இல்லாவிட்டாலும் நன்றாக பாடும் ஒருவராக தற்போது திகழ்ந்து வருவார்.எது கேட்டாலும் “கவுள் கொடுத்த வரம் ” எனும் டயலக்கை சொலவதால் மேடையே சிரிப்பலையில் தான் கிடக்கும்.

இவர் ராமநாதபுரத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் இருந்து தான் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். தான் மீன் பிடிக்கப் போகும்போது பாட்டு பாடிக்கொண்டே இருப்பாராம்.

அந்த மாதிரி இவர் பாடும் போது தான் இவருடைய அம்மாவும் மாமாவும் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்திருந்தார்களாம்.அதாவது சின்ன வயதில் இருக்கும்போதே இவருடைய அப்பாவுக்கு இவரை எப்படியாவது ஒரு பாடகராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்கப் போன அவருடைய அப்பா திரும்பவே இல்லையாம். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்ட செய்தி இவருக்கு கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் தனிமையை ரசித்து வாழ ஆரம்பித்துள்ளார்..


ஆனாலும் எப்படியோ இவர் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்திருக்கிறார். அதற்கு பின்னர் குடும்ப கஷ்டம் காரணமாக இவர் பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கவில்லையாம். கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கிறார். 

வீட்டிலும் இவருக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் இருந்து உள்ளார்கள். அவர்களுடைய திருமணத்தையும் நாகர்ஜுனா தான் செய்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இங்கே எப்படி நம்மால் தொடர முடியும் நம்முடைய குடும்ப சூழ்நிலை இருக்கிறதே என்றெல்லாம் இவர் யோசித்து பார்த்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகமாக இருப்பதை பார்த்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களுடைய சொந்தக்காரர்கள் உறவினர்கள் போல நடத்துகிறார்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். எப்படியோ போராடி, பாட்டு முறைப்படி தெரியாமலே தன்னுடைய முயற்சியால் இந்த நிகழ்ச்சியில் அனைவருடைய மனதை கவர்ந்த நாகார்ஜுனா அவருடைய அப்பாவின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.


இவ்வாறுஇருக்கையில் இவருக்கு ஒரு காதல் கதையும் உள்ளது.அதாவது இவர் 3வருடமாக ஒரு பொண்ணை காதிலித்துள்ளார்.அப்ப இரின் சகோதரிகளுக்கு திருமணம் ஆகவில்லை.இவ்வாறு இவர் காதலித்துக் கொண்டு இருக்கையில் இரவு 7.45இற்கு போன் பண்ணி தற்பொழுது நேரம் 7.45 ஆனால் இன்று 8 மணிக்கு நான் உன்னுடைய மனைவியாக இருக்கனும் என்று கூற இவர் ஷாக்கடைந்து விட்டாராம்.

அதாவது திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த இவரும் பேசி சமாளித்துள்ளார்.இருந்தும் அந்த பிள்ளை நான் வேணுமா இல்லாவிடில் உன் குடும்பம் வேணுமா..? எனக் கேட்க இவரும் என்னுடைய குடும்பம் தான் வேணும் என்று கூறியுள்ளார்.அதன் பின் என்னுடன் பேசவேண்டாம் என அந்த பொண்ணு போனை கட் பண்ணிவிட்டாராம்.

இவ்வாறுஇருக்கும் போது இவர் மறுநாள் கடலுக்கு சென்றுவிட்டு வரும் போது  அந்த பொண்ணு அவரின் மச்சானுடன் ஓட்டம் பிடித்துள்ளதாம்.அதில் இருந்து இவருக்கு ஒரே சங்கடமாக போச்சுதாம்.இந்த காதல் கதை நடந்து 3 வருடங்கள் ஆகியும் இன்னமும் யாரையும் காதலிக்காமல் திருமணம் செய்யாலும் இருக்கிறார் நம்ம சரிகமபா நாகார்ஜுனா.

Advertisement

Advertisement