• Oct 26 2024

பிக் பாஸ் வீட்டில் அகிம்சை முறையில் முத்தம் கொடுத்த பெண் போட்டியாளர்! இதற்கு மாயா பரவால போல..

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இந்த முறை சீசனில் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பை பெற்றனர்.

அதுமட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் வந்த பிறகு தான் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் அழுது புலம்பிய அர்ச்சனா போக போக ஆட்டத்தை புரிந்து கொண்டு தற்போது அனைவரையும் அடக்கி ஆளும் ஆவேச அர்ச்சனாவாக உருமாறிவிட்டார்.


இந்த நிலையில், தற்போது ரவீனாவை இழுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த  காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது

அதன்படி, குறித்த வீடியோவில் கட்டிலில் அர்ச்சனா படுத்து இருக்க, அங்கு ரவீனா வருகிறார். இதன்போது அவரின் கையை பிடித்து இழுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் அர்ச்சனா.

இதன் போது, ரவீனா முனங்கிக் கொண்டே இது அகிம்சை முறையில் அட்டாக் நடக்குது என சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்.

இதேவேளை,சில நாட்களாகவே அர்ச்சனா ரவீனாவை இழுத்து வச்சு கொஞ்சுவது வழக்கமாகி விட்டது. எனினும் இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை வைச்சு செய்து வருகின்றனர். தற்போது குறித்த வீடியோ பேசுபொருளாகி, வைரலாகி உள்ளது.





Advertisement