பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஜனவரி 19ஆம் தேதி உடன் நிறைவுக்கு வந்தது. அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து சுமார் 106 நாட்கள் வரை ஒளிபரப்பானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் எட்டில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவராக சீரியல் நடிகை அன்ஷிதா காணப்படுகின்றார்.இவர் செல்லமா சீரியலில் நடித்து பிரபலமானார்.
d_i_a
இந்த நிலையில், அன்ஷிதா பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடந்த சண்டை பற்றி ரகசியம் உடைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், சாதாரணமாக வீட்டில் இருக்கும்போது அம்மாவுடன் சண்டை பிடித்தால் இரவு அல்லது இரண்டு நாட்களுக்குள் அந்த சண்டை, கோபம் எல்லாம் முடிந்துவிடும்.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது காலையில் சண்டை போட்டால் மாலையில் எப்படியாவது அது காணாமலே சென்று விடும். ஏதோ ஒரு விதத்தில் சாப்பாடு ஊட்டும் போதோ, அல்லது என்னடா பண்ணுற என்று ஒருத்தரை கேட்கும் போதோ எப்படியாவது அந்த சண்டை அன்றே உடைந்து விடுகின்றது.
நானும் யாருடனும் சண்டை போட்டுவிட்டு இருக்க மாட்டேன். காலையில் சண்டை போட்டால் மாலையில் நானே போய் கதைத்து சமாதானம் செய்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!