• Dec 25 2024

அமரன் வசூலில் திடீரென ஏற்பட்ட மாற்றம் !ஆச்சர்யத்தில் படக்குழு மற்றும் சிவகார்த்திகேயன்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பிரபலங்களும், ரசிகர்களும் அரசியல்வாதிகளும் என பலர் பரவலாக பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில், இந்த தீபாவளி சிறப்பு வெளியீடாக "அமரன்" என்ற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அவரது வீரமான கதை மற்றும் இதமான சம்பவங்களைக் கூறுகின்றது.


"அமரன்" திரைப்படம், சிவகார்த்திகேயனின் நுட்பமான நடிப்பிலும், தனித்துவமான காட்சிகளிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இது சமூக வாழ்க்கை மற்றும் படைப்பாற்றல் என்பவற்றின் மிகச்சிறந்த கலவையாக அமைந்துள்ளது.


இந்தப் படம் மிகச்சிறந்த வசூலைத் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் ஆச்சரியமாகவும், பெருமையாகவும் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.திரையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலகளாவிய வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிய தகவலின் படி, இந்த திரைப்படம் வெளியாகிய ஏழு நாட்களில் உலகளவில் 180 கோடி வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement