• Apr 07 2026

ஓடிடியை அதிரவைத்த ‘முத்து என்கிற காட்டான்’.. வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு.!

shali / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீப காலங்களில் தனித்துவமான கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிற விஜய் சேதுபதி, இந்த தொடரின் மூலம் மேலும் ஒரு சுவாரஸ்யமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இப்படைப்பை தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த தொடரில் விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமான வி.ஜே. பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பது தொடரின் பலமாக பார்க்கப்படுகிறது. கதை, நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தொடரை ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளன.


மார்ச் 27ஆம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸ், வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் தொடர்ந்து இந்த தொடருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement