• Apr 23 2026

'LIK' படம் வேறலெவல் போலயே... தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்.! குஷியில் படக்குழு

shali / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், க்ருத்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படம், வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன், திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாய் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அந்த சந்தர்ப்பத்தில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், இசையமைப்பாளர் அனிருத்தையும் அணைத்து தனது அன்பை பகிர்ந்துள்ளார். இந்த உணர்ச்சிபூர்வமான தருணம் அங்கு இருந்த ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படக்குழுவினரின் ஒற்றுமையும், வெற்றியின் மகிழ்ச்சியும் இந்த காட்சிகள் மூலம் வெளிப்படுகின்றன. ரசிகர்களும் இந்த தருணத்தை பாராட்டி, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement