• Apr 04 2025

பாராளுமன்றத்தில் திரையிடப்பட்ட "சாவா" திரைப்படம்..! சந்தோசத்தில் படக்குழு!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத வீரர்களில் ஒருவர் மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜா. சிவாஜி மகாராஜாவின் மகனாகவும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது மன்னனாகவும் இருந்த சாம்பாஜி, அவரது தாயகம் மற்றும் மதத்தின் பாதுகாப்புக்காக இறந்த மனிதர். அவரின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் தியாகங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமே ‘சாவா’.

இப்படம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது. முக்கியமான விடயம் என்னவென்றால், இப்படத்தை பார்வையிட தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பாடு செய்தமை தான். இந்த நிகழ்வு, இந்திய அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாகக் கருதப்படுகின்றது.


இத்திரைப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக கதாநாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

மேலும் முதன்முறையாக ஒரு வரலாற்று படைப்பை நாடாளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவல் அனைத்து ரசிகர்களிடையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement