• Jan 09 2025

200 நாட்கள் தாண்டி ஓடிய படத்திற்கு இன்று வயது 24... அது எந்த படம் தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

குடும்ப படங்களின் முன்வரிசையில் மாறாமல் இருப்பது 2001 ஆம் ஆண்டு  ஆர்.பி.சவுத்திரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் பெரும் நட்சத்திர பங்களிப்புடன் வெளிவந்த திரைப்படமான ஆனந்தம். இப் படம் இன்றும் உதாரணமாக சொல்லப்படும் . இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா என நடிகர் வரிசை நீள்கிறது.


எஸ்.ஏ.ராஜ்குமார்  இசையில் எவர் கிறீன் பாடல்களை கொண்ட இத் திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் " பாடல் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானார் கவிஞர் யுகபாரதி. பட்டிதொட்டி எங்கும் இசைத்த இப் பாடல் இன்றும் தொலைதூர காதலின் தேசிய கீதமாகவே இருக்கிறது என்றால் குறையில்லை.

 

2001 ஆம் ஆண்டு  மே 25 அன்று வெளியாகி தொடர்ந்து 200 நாட்கள் தாண்டி திரையரங்குகளில் ஓடி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ஆனந்தம் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக ஆனது. 24 வருடங்களை கடந்த இப் படத்திற்கான ரசிகர்கள் தனியென்றே கூறலாம். இன்றும் தொலைக்காட்சிகளில் பிரசுரமாகும் இப் படம் குடும்ப ரசிகர்களால் கொண்டாடபடுகிறது என்பதே உண்மை.

Advertisement

Advertisement