• Apr 17 2026

வரும்.. வரும்னு சொன்ன படம் வரல.! லிஸ்டிலேயே இல்லாத ஜீவா படம் கலக்கிருச்சு.! மன்சூர் பகீர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சமீபத்திய திரைப்பட ரிலீஸ்கள் மற்றும் வெற்றி அனுபவங்களைப் பற்றிய தகவல்களில், நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவரது விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


விஜய் நடிப்பில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்தும், சென்சார் பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. மன்சூர் அலிகான் இது குறித்து பேசுகையில், “வரும் வரும்னு சொன்னாங்க, வரல… Bad Luck. எங்கும் அரசியல், எதிலும் அரசியல்,” என்று கூறி, அரசியல் தலையீடுகள் திரைப்பட வெளியீட்டில் ஏற்படுத்திய தடைகளை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

மறுபக்கம், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸாக திரையரங்குகளில் வெளிவந்ததுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மன்சூர் அலிகான், இதைப் பற்றிய விமர்சனத்தில், “‘பராசக்தி’ பொங்கல்… Better Different.”என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான "தலைவர் தம்பி தலைமையில்" திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து மன்சூர் அலிகான் பேசுகையில், “ லிஸ்டிலேயே இல்ல எங்கிருந்து வந்ததுன்னு தெரியல… ஜீவா பொங்கல் ஆக்கிட்டான்.” என்று கூறி, ஜீவாவின் படத்திற்கு சிறப்பான ரிவ்யூ கொடுத்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement