• Apr 18 2026

ராகவாவுக்கு பேய் படங்கள் போர் அடித்துவிட்டதா? பர்த்டே ஸ்பெஷலாக தெறிக்கவிட்ட போஸ்டர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஆகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ். இவருக்கென்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் மக்களுக்காகவே நிறைய சேவைகளை ஆற்றி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா என திரில்லர் படங்களையும் காமெடி படங்களையும் பேய் படங்களையும் எடுப்பதில் ராகவா லாரன்ஸ் முக்கிய இடத்தில் காணப்படுகிறார். இவருடைய படங்கள் பயத்துடன் காமெடி கலந்ததாக காணப்படும்.

மேலும் இவருடைய படங்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முக்கிய கேரக்டர் கொடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்திருப்பார். இது இவருக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக காணப்படுகிறது


தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் தனது 25 வது படமான கால பைரவா படத்தில் நடிக்கின்றார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தினை நீலத்ரி ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் கால பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  அத்துடன் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.


Advertisement

Advertisement