• Dec 25 2024

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் டுவிட்... வைரலாகும் New Movie போஸ்டர்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ். தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

Joe' OTT: When and where to watch Rio Raj's film | Tamil Movie News - Times  of India

அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார்.  கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

d_i_a

Actor rio raj starring sweet heart movie produced by yuvan shankar raja:  watch video | ரியோ நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்:  வீடியோ | Movies News in Tamil

இதனை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கியுள்ளார்.  கடந்த மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை வெளியாகாத நிலையில், ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்ட்டர் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதற்கு நடிகர் ரியோ நன்றி தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். 

மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் வெளியீடு - Chennai City News

Advertisement

Advertisement