• Dec 27 2024

முதல் காட்சியே ரத்தாகி சொதப்பிய கல்கி 28 98 ஏடி.. தியேட்டரில் பொங்கிய ரசிகர்கள்! வைரல் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான கல்கி 28 98 ஏடி திரைப்படம் இன்றைய தினம் ரிலீசானது. இந்த படத்திற்கு பலரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள்.

கல்கி 28 98 ஏடி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட 37 கோடி வசூலித்துள்ளதாம். இந்த படத்தில் கமலஹாசன், அமிதாபட்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர்  முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் துல்கர் சல்மான், இயக்குனர் ராஜமவுலி. விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகா மந்தாரா ஆகியோர் கேமியோ ரோல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத்தொடர்ந்து பிரபாஸின் ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளில் படத்தை பார்க்க நேற்று இரவு இருந்தே காத்து இருந்து உள்ளார்கள். இந்த படம் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட, அதில் பிரபாஸில் ரசிகர்கள் ஹிட் பாடல்களை ஒலிக்க செய்து நடனமாடி இந்த படத்தை ரிலீஸ் செய்து கொண்டாடியுள்ளனர்.


இந்த படத்தின் ப்ரோமோஷனன்கள் பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தான் அதிகம் செய்யப்பட்டது. இதனால் மும்பையில் இந்த படத்தின் டிக்கெட் விலை 1560 இல் இருந்து 2300 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கல்கி 28 98 ஏடி படத்தில் முதல் காட்சிகள் ஐமேஸ்  திரையரங்குகளில் ஒளிபரப்பப்படவில்லை, மாறாக ரசிகர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் பட தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டிய கேடிஎம் எனப்படும் கீ டெலிவரி மெசேஜ் பாஸ்வேர்டை தரவில்லை என கூறப்படுகின்றது. இதனால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் இணையத்தில் வைரலானது.

அதேபோல புனேவிலும் ஐமேக்ஸ் திரையில் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க ஓனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement