• Dec 27 2024

ஒரு பாட்டுக்கு 30 கோடியா? இந்தியன் தாத்தாவுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்தியன் 1 படத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல்களை மட்டும் தட்டிக்கட்ட இந்தியன் தாத்தா, தற்போது தயாரான இரண்டாவது பாகத்தில் இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் ஊழல்வாதிகளை  களையெடுப்பார் என கூறப்படுகிறது.

இதன் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் படு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. பல தடைகளைத் தாண்டி இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் வியக்க வைக்கும் பட்ஜெட் விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அதன்படி சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 படம் படத்தில் குறிப்பாக ஒரு பாடல் காட்சிகள் மட்டும் 30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம். இந்தியன் முதல் பாகத்தின் பட்ஜெட்டை  விட டபுள் மடங்கு பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளார் சங்கர்.

இதேவேளை, இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement