• Dec 25 2024

'அமரன்' வெற்றியின் உச்சம்..!ரசிகர்களை கவர்ந்த மாபெரும் படம்..! வசூல் அளவு இத்தனை கோடியா ?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிய இப்படம், இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவானது.


இத்திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து தொடங்கியது. பத்து நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடியை கடந்த படம், இப்போது 16 நாட்களில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


தமிழகத்தில் மட்டும் ரூ. 135 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அமரன், இன்னும் சில நாட்களில் ரூ. 300 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவானது என்பது கூடுதல் சிறப்பு. ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற அமரன், தமிழக திரைத் துறையின் புதிய வரலாற்றை எழுதும் படமாக பார்க்கப்படுகிறது.வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் இப்படம், ரசிகர்களிடையே நிலைத்து நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement