• Oct 05 2025

பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிசுருட்டிய இட்லி கடை.! எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஆனால் அதற்குப்பின் வெளியான குபேரா படம் மிகவும் குறைவான வசூலை பெற்றது. 

இதை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படம் நேற்றைய தினம் வெளியானது.  இதில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்கள் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், இட்லி கடை படத்தின் முதலாவது வசூல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 10.40 கோடியை வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 9. 75 கோடியை வசூலித்ததாகவும், தெலுங்கு வெர்ஷனில் 65 இலட்சம் வசூலை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் இது தொடர்பிலான உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்தடுத்த நாட்களில் இட்லி கடை படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement