• May 23 2026

சம்பவம் முடிஞ்சிடுச்சு..! அசிங்கப்பட்டு வெளியேறிய விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் அம்மா வீட்டில் பார்ட்டி நடக்கும்போது விஜயாவை சுதா ஆடச் சொல்லுகின்றார். இதனால் கோபமடைந்த விஜயா ஆவேசமாக பேசுகின்றார். மேலும் இது வீடா என பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றார்.

இதைப் பார்த்த சுதா படிக்காத பட்டிக்காடு என விஜயாவைப் பற்றி மனதுக்குள் பேசுகின்றார். அதற்குப் பின்பு அங்கு வந்த ஸ்ருதி, ரவி  விஜயாவை காணவில்லை என எல்லா இடமும் தேடுகின்றனர்.

இறுதியில் முத்துவும் மீனாவும் படித்துக்கொண்டிருக்கும் வகுப்பிற்குச் சென்று அங்கு நடந்தவற்றை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களும் பதற்றமடைந்து விஜயாவை தேட  ஆரம்பிக்கின்றனர்.


இன்னொரு பக்கம் மனோஜின் ஸ்டோர் ரூமில் ரோகிணி தங்குகின்றார். அடுத்த நாள் காலையில் அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே கலகலப்பாக பேசிக்கொண்டு வர, அந்த நேரத்தில் விஜயா வந்து கதவை தட்டுகின்றார். இதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

அதன் பின்பு விஜயா அங்கு இருக்க, ரோகிணியை ஒரு வகையில் வெளியே அனுப்பிவிடுகின்றார். இருந்தாலும் கண்ணாடியில் பெண் ஒருவரின் ஸ்டிக்கர் போட்டிருக்கிறது என விஜயா மனோஜிடம் கேட்க, அதனை ஒரு வகையில் சமாளித்துவிடுகின்றார். இனி இங்குதான் இருக்கப் போகின்றேன் என்று விஜயாவின் முடிவைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சியடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement