• Jul 21 2026

சகநடிகையை கெட்ட வார்த்தையால் பேசிய ராஷ்மிகா.. அடுத்த நொடியே நிகழ்ந்த சம்பவம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் க்ரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமாக நடைபெற்ற இந்த விழாவில், ராஷ்மிகா மந்தனா பேசிய ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மேடையில் க்ரித்தி சனோன் குறித்து ரசிக்கும்படி பேசிக்கொண்டிருந்த ராஷ்மிகா, தவறுதலாக ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அந்த வார்த்தை வெளிவந்த உடனே தன்னுடைய தவறை உணர்ந்த அவர், சிரித்தபடியே “அந்த வார்த்தையை தயவுசெய்து சென்சார் செய்து விடுங்கள்” என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அதோடு, ரசிகர்களிடமும் “மன்னித்து விடுங்கள்” என்று நகைச்சுவையாக கூறியதால் அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.

ராஷ்மிகாவின் இந்த இயல்பான ரியாக்ஷனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர் அதை ஒரு சாதாரண slip of tongue என எடுத்துக்கொண்டாலும், மற்றொருபக்கம் ஒரு சிலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement