• Dec 26 2024

இணையத்தில் வைரலாகும் தகவல்... காவாலா நாயகிக்கு கல்யாணம்... எப்போது தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா அவர்கள் கடந்த 2005 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அன்றிலிருந்து இவருக்கென ரசிகர் பட்டாளம் வளர்ந்துகொண்டே இருக்கிறார்.


கேடி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து இவர் நடித்த கல்லூரி என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். அதன் பிறகு பிரபல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.  


சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் ஆடிய காவலா பாடலுக்கு மயங்காத ரசிகரே இருக்க முடியாது. தற்போது தமன்னாவுக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 


தமன்னா விஜய் வர்மா நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு தமன்னா சினிமாவில் இருந்து விலகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement