• Dec 26 2024

வடிவேலு - சிங்கமுத்து இடையே பிரச்சினை... நஷ்டஈடு கேட்ட வடிவேலு! பதிலடி கொடுத்த சிங்கமுத்து!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் நடித்து பல ஹிட் காமெடிகளை தந்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு இவருடன் இணைந்து பலப்படங்களில் ஒன்றாக நடித்தவர் தான் நடிகர் சிங்கமுத்து.  நடிகர் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றி பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார்.


இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்து தன்னை பற்றி துளி கூட உண்மையில்லாத பொய்களை அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். எனது பெயரை கெடுக்கும் வகையில் பேட்டி கொடுத்து வரும் சிங்கமுத்து மானநஷ்டமாக ரூ. 5 கோடி வழங்க வேண்டும் என வடிவேலு கேட்டிருக்கிறார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இது குறித்து நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதிலளித்துள்ளனர். அதில், "நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின் நான் தான் காரணமாக இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரை பற்றி பேட்டிகளில் பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை" என்று சிங்கமுத்து தரப்பில் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement