• Dec 25 2024

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த குபேரா டீம்! ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதில் ராஷ்மிக்கா மந்தனா, நாக அர்ஜுனா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Kubera teaser release date announced with striking poster of Dhanush,  Rashmika Mandanna and Nagarjuna | Check out

தனுஷ் ராயன் என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் நடித்து வசூலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்னும் சில படங்கள் இயக்கியும் நடித்தும் வருகிறார். தனுஷின் 51 வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் நேரடி தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டரில் தனுஷ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

d_i_a

Kubera: Nagarjuna's First Look Poster From Dhanush-Sekhar Kammula's  Interesting Film To Be Out Today! Details - Filmibeat

இப்படத்தின் முதல் லுக்போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி, தாய்லாந்து, மும்பை ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் நடந்து வருவதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

Mahesh Babu for Kubera | cinejosh.com

இந்த நிலையில், குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று வெளியிடுகிறார். இதுகுறித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. படத்தினை ரீச் செய்யும் நோக்கத்தில் சூப்பர் ஸ்டாரை குபேரா படக்குழு அணுகி இந்த வீடியோவை வெளியிடும்படி கேட்டுக் கொண்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement