• Dec 25 2024

தரமான சம்பவம் செய்த இயக்குனர்... அடடே மரணமாஸ்... இணையத்தில் வைரலாகும் "அமரன்" மேக்கிங் வீடியோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மேக்கிங் ஆக்ஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களினால் விரும்பி பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இராணுவத்தில் சேவை செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய திரைப்படத்தில் நடிக்கிறார். 


இப்படத்தில் இருந்து டீசர் மற்றும் சில போஸ்டர்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மேக்கிங் இன் ஆக்ஷன் என குறிப்பிட்டு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு, ரசிகர்களுக்கு விருந்தாக அமரன் வெளியாகிறது. 


Advertisement

Advertisement