• Dec 26 2024

'THE MAN OF MY LIFE' தன் காதல் கணவனை நினைத்து பெருமிதம் கொள்ளும் சீரியல் நடிகை! விசேஷ நாளில் வைரலாகும் புகைப்படங்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஷபானா ஷாஜன். இன்றைய தினம்  தன்  கணவரான நடிகர் ஆர்யனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை வாழ்த்தியுள்ளார் ஷபானா.

தற்போது அவர்கள் இருவரின் புகைப்படங்களும்  இணையதங்களில் அதிகம் உலா வந்துகொண்டிருக்கிறது.

கேரளாவில் பிறந்த ஷபானா ஷாஜன், மும்பையில் தனது படிப்பை முடித்த பின்னர் முதல் சீரியலான செம்பருத்தி சீரியலே பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கான பாராட்டுக்களையும் பெற்று தந்தது. 


எனினும், சமீபத்தில் செம்பருத்தி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதேவேளை, நடிகர் ஆர்யனை காதலித்து வந்த ஷாபனா அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், தன் காதல் கணவருடைய பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை அள்ளிக் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement