விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
அதில், மனோஜ் வாங்கிய புதிய பேலஸை பார்ப்பதற்கு விஜயாவின் மொத்த குடும்பமும் செல்கிறது. அங்கு சென்ற விஜயா பேலஸை பார்த்து துள்ளிக் குதிக்கிறார்.
மேலும் மனோஜும் ஆசை ஆசையாய் வீட்டை காசு கொடுத்து வாங்குகிறார். இதன் போது விஜயா மனோஜை பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு என புகழ்ந்து தள்ளுகிறார்.
d_i_a
இதை தொடர்ந்து முத்து அதே இடத்திற்கு சவாரி கொண்டு வர, அங்கு வீட்டை விற்றவர்களுடன் தகராறு பண்ணுகிறார். இதன்போது அங்கு வந்த மனோஜ், ஏன் அவருகிட்ட கத்திக் கொண்டு இருக்கா? அவருகிட்ட தான் இந்த வீட்டை வாங்கினேன் என்று சொல்லுகிறார்.
இதைக் கேட்ட முத்து, என்னடா சொல்லுற.. இவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக் காரன் என்று சொல்லுற.. அவன் வாடகை காரில் போய்கிட்டு இருக்கான் என சொல்லுகிறார். இதனால் மனோஜும் கொஞ்சம் தடுமாறுகிறார்.
மேலும் தனக்கு சந்தேகமாக இருக்கு என முத்து சொல்லுகிறார். அதன்பின் அந்த வீட்டுக்கு ரோகிணியின் பெயரில் இருந்து ரோ.. மனோஜில் இருந்து ம.. விஜயாவில் இருந்து யா.. என 'ரோமயா' என்று அதிசயமாக பெயர் வைக்கிறார்கள். இது தான் தற்போது வெளியான புதிய ப்ரோமோ.
Listen News!