• Sep 17 2026

அழகான கயாடுவிற்கு பின்னால் நிகழும் மர்மம்.. வெளியானது ‘இம்மார்ட்டல்’ பட திரைவிமர்சனம்

shali / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராட்சச உருவத்தில் பிறக்கும் குழந்தையை மையமாக வைத்து தொடங்கும் கதை, 2026-ம் ஆண்டில் ஜி.வி. பிரகாஷ், கயாடு லோஹர் வசிக்கும் வீட்டைச் சுற்றி நகர்கிறது. கயாடு சாதாரண பெண் இல்லை என்பதை அறியும் ஜி.வி., அவரிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது பல மர்மங்கள் வெளிவருகின்றன. கயாடு யார், அந்த 1000 ஆண்டுகள் பழமையான குழந்தைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் சுவாரஸ்யமான கதை.


ஜி.வி. பிரகாஷ் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அமானுஷ்ய சக்தியிடமிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது. கயாடு லோஹர் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அழகும் ஆபத்தும் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா முதல் பாதியை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். பதற்றமான காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கின்றன. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் இருந்தாலும், சில இடங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பாண்டஸி கதைக்கு இன்னும் வலுவான திரைக்கதை மற்றும் நம்பகமான கிராபிக்ஸ் இருந்திருக்கலாம். குறிப்பாக மான்ஸ்டர் CG சில காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது.

சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில், வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களம் மற்றும் கயாடு லோஹரின் மிரட்டலான நடிப்புக்காக ‘இம்மார்ட்டல்’ படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Advertisement

Advertisement