• Dec 25 2024

கயலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்... டிஆர்பி-யில் முன்னணியில் எதிர்பார்க்காத ஒரு தொடர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தொடர்கள் தான் முதல் ஐந்து இடங்களையும் பிடித்து வருகின்றன. விஜய் டிவி தொடர்க்களும் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. அந்த வகையில் முன்னணியில் இருந்த கயல் நாடகத்தை புத்தம் புதிய தொடர் ஓரங்கட்டியுள்ளது.


விஜய் டிவியின் டாப் சீரியல் சிறகடிக்க ஆசை பெறும் ரேட்டிங்கை விட சன் டிவியின் ஏழு அல்லது எட்டு சீரியல்கள் அதிகம் ரேட்டிங் பெறுகின்றன. அந்த வகையில் கயலை  தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.


இப்பொது கயல் சீரியலை பின்னுக்கு தள்ளிய சிங்கப்பெண்ணே என்ற நெடும் தொடர். வழக்கமாக கயல் சீரியல் தான் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதை புது சீரியலான சிங்கப்பெண்ணே பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இது எதிர்பார்க்காத விஷயம் என சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருக்கின்றனர்.


ஒரு அப்பாவி கிராமத்து பெண் வேலைக்காக தனியாக நகரத்துக்கு வரும் போது வேலை செய்யும் இடத்தில் மற்றும் தங்கும் இடத்தில் சந்திக்கும் சிக்கல்கள் தான் சிங்கப்பெண்ணே சீரியலில் கதை என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement