• Dec 26 2024

ஈஸ்வரியிடம் செல்வி கேட்ட ஒரே ஒரு கேள்வி... பாக்கியா கொடுத்த அதிர்ச்சி! கொஞ்சமும் திருந்தாத ராதிகா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் , ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று ஈஸ்வரியிடம் குடும்பத்தார் கேட்க, அவர் சம்மதம் தெரிவிக்கின்றார். ஆனால் ராமமூர்த்தி மறுக்கின்றார். எனினும் குடும்பத்தார் வற்புறுத்தியதால் பிறகு உங்க இஷ்டம் என்று சொல்லி சம்மதித்து விடுகின்றார்.

மறுபக்கம் கோபியும் மையூவும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் ராதிகா காப்பி எடுத்துட்டு வரவா என்று கேட்கின்றார். அவரும் எடுத்துட்டு வா என்று சொல்கிறார். பிறகு ஒரு குட் நியூஸ் என்று ஜெனி கர்ப்பமாக இருப்பதை ராதிகாவிடம் சொல்ல, அவர்  பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உங்களுக்கு உங்க பசங்க உங்க குடும்பத்துக்கு ஏதும் ஒன்னுனா சந்தோஷமா இருப்பீங்க இல்லன்னா சோகமா இருக்கீங்க என கோபப்படுகின்றார்.

இன்னொரு பக்கம் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு யாரெல்லாம் கூப்பிடவேண்டும் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க,  கோபி சார்ர கூப்பிடுவீங்களா என்று செல்வி கேட்கின்றார். அதற்கு ஈஸ்வரி கோபி சார்னு யாரையும் எனக்குத் தெரியாது எதுக்கு நான் கூப்பிட போறேன் என பதிலடி கொடுக்கின்றார்.

பாக்கியாவிடம் எழிலை கூப்பிடுவியா என்று கேட்க, எழிலுக்குத் தெரியும் அவனுக்கு எதுக்கு சொல்லணும் அவனே வருவான் என்று சொல்லிவிட்டு எழுந்து போகின்றார்.


அதன்பின்பு அமிர்தா நிலாவிற்கு கதை சொல்லிக் கொண்டிருக்க எழில் அங்கே வந்து இரண்டு, மூன்று வீடு பார்த்ததாகவும் அதில் ஒன்றும் செட்டாகவில்லை என்றும் இரண்டு நாட்களில் பார்த்து விடலாம் எனவும் சொல்லுகின்றார். அப்போது அம்மா போன் பண்ணினார்களா என்று கேட்க, அமிர்தா நைட் பண்ணினாங்க என்று சொல்லுகின்றார். ஆனால் தனக்கு பண்ணவே இல்லை என கவலைப்பட அப்படி என்றால் நீங்கள் ஃபோன் பண்ணி பேசலாம் தானே சொல்லுகின்றார்.

ஆனாலும் தான் அம்மா ஆசைப்பட்டபடி பெரிய ஆளாகி தான் அம்மாவை பார்க்க போவதாக எழில் சொல்கின்றார். இதன்போது ஈஸ்வரி கால் பண்ணி ராமமூர்த்திக்கு நாளைக்கு பிறந்தநாள் கொண்டாட போவதை பற்றி சொன்னதோடு உனக்கு இஷ்டம் இருந்தால் வா என்று சொல்கின்றார்.

ஆனாலும் எழில் எனக்கு விருப்பம் இருக்கு ஆனால் நான் வந்தால் உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் என சொல்ல, அப்படி என்றால் நீ வரவே வராதே என ஈஸ்வரி அழுது கொண்டே போனை வைத்து விடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement