• Dec 26 2024

அடுத்தடுத்து சீரியலை விட்டு ஓட்டமெடுக்கும் நடிகைகள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையும் திடீர் மாற்றம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ்  தொடரின் முதல் சீசன் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக கொண்டு எடுத்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, பாண்டியன் கேரக்டரிலும்,அவரது மனைவி கேரக்டரில் நடிகை நிரோஷாவும் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் ஆகாஷ் பிரேம்குமார், கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஹேமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.



மேலும், கண்ணனை காதலித்து வீட்டை விட்டு ஓடிய ராஜி, அவரால் ஏமாற்றப்பட்ட நிலையில், தனது அண்ணனின் மானத்தை காப்பாற்றுவதற்காக அவரது கடைசி பையனை ராஜுக்கு கட்டி வைக்கிறார் கோமதி.

இதை அடுத்து ராஜியின் குடும்பத்தார் அவரை தலைமுழுகிவிட, வேறு வழியின்றி தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்கிறார் பாண்டியன். தற்போது கதிர், ராஜிக்கு இடையிலும் நல்ல கெமிஸ்ரி ஒர்கவுட் ஆகிறது.  


இந்த நிலையில், ராஜியின் சித்தி மாரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது விலகவுள்ள காரணத்தால் அவருக்கு பதிலாக மற்றும் ஒரு நடிகை மாரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

அதன்படி இதுவரையில் மாரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைக்கு பதிலாக தற்போது நடிக்க உள்ள நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்,


Advertisement

Advertisement