• Dec 26 2024

விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ள ஜோடி!இணையத்தில் வைரலாகியுள்ள புகைப்படம்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தீபிகா படுகோன்,எமி ஜாக்சன்,மாளவிகா மோகனன்,மடோனா செபாஸ்டியன்,ராஷி கண்ணா மற்றும் காஜல் அகர்வால் போன்ற பல பிரபல நடிகைகளுக்கு டப்பிங் கதைத்து பிரபலமானவர் தான் நடிகை ரவீனா ரவி.

டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டுமல்லாமல் அண்மையில் வெளியாகிய பகத் பாசில் நடிப்பில் வெளியாகிய மாமன்னன் என்ற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.


இந்நிலையில் வாலாட்டி படத்தை இயக்கிய இயக்குனர் தேவன் ஜெயக்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டு அவர் தான் தனது அன்புக் காதலர் என அறிமுகம் செய்துள்ளார்.குறித்த இவ் ஜோடி அண்மையில் மணம் முடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. ரவீனா தமிழில் சினிமாவில்  மாமன்னன் திரைப்படத்தை மட்டுமல்லாது ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே மற்றும் வட்டார வழக்கு போன்ற பல படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அவரது இன்ஸ்டா பதிவு இதோ..

Advertisement

Advertisement