• Dec 25 2024

செழியனை அதிரடியாக அரெஸ்ட் பண்ணும் போலீஸ்! வீட்டாருக்கு சவால் விடும் பாக்கியா! Baakiyalakshmi

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இனி என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இதுவரையில், செழியன் வீட்டிற்கு வந்த மாலினி, 'எனக்கும் செழியனுக்கும் இடையில பர்சனல் தொடர்பு இருக்கு' என்று சொல்லி குடும்பத்தை பிரிக்கிறார். அதோட இது எல்லாம் பாக்கியா ஆண்டிக்கு தெரியும் என அவரையும் மாட்டி விட்டார்.இத தொடர்ந்து ஜெனியும் செழியனுக்கு கண்டபடி திட்டி அவரின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டு 'எனக்கும் என் குழந்தைக்கும் இனி இந்த வீட்டோட எந்த சம்பந்தமும் இல்லை. நான் விட்டுவிட்டு போறன்' என்று சொல்லிட்டு போகிறார்.இத தொடர்ந்து எல்லாரும் பாக்கியாவையும் தப்பா நினைச்சு அவருக்கு திட்டிட்டு இருக்காங்க.



இனி என்ன நடக்கும் என்று பார்த்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு முந்திய மாலினி செழியன் தன்னை ஏமாற்றியதாக  கேஸ் கொடுக்கிறார். அவங்களும் அந்த மாலினி சொன்னது உண்மை என்ன நம்பி மாலினிட கேஸ் எடுத்துக் கொள்கின்றனர். இதுக்கு அப்புறமா பாக்கியா வீட்டுக்கு வந்த போலீஸ் ' உங்க பிள்ள செழியன அரெஸ்ட் பண்ண வந்து இருக்கம். மாலினி கேஸ் குடுத்து இருக்கா' என்று சொல்லி அவரை அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க. 


இதுக்கு அப்புறம் தான் பாக்கியா வீட்ல உள்ளவங்க கிட்ட சவால் போடுறா. அது என்ன என்றால் 'செழியன் மேல எந்த  தப்பும் இல்லை என்றத நான் நிரூபிச்சு காட்டுறன். அதுவும் ஒரு வாரத்துக்கு உள்ள நிரூபிச்சு காட்டுறன். அதோட ஜெனியையும் வீட்டுக்கு கூட்டிட்டு வருவன்' என்று எல்லார்டையும் சவால் விடுகிறார் பாக்கியா. இதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement