• Dec 27 2024

மனோஜ் கடைக்கு தேடிவந்த போலீஸ்.. மீண்டும் ரோகிணிக்கு வந்த சிக்கல்! வருத்தப்பட்ட விஜயா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க, நீ எதுக்குபா மன்னிப்பு கேட்கிற என்று கலங்குகிறார்கள். விஜயா திருந்துவா என நான் நினைச்சேன் ஆனா எனக்கு இப்ப அந்த நம்பிக்கை இல்லை. அவர் செஞ்ச தப்புக்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் என சொல்லுகின்றார்.

அதன் பின்பு மீனாவின் பொறுமையை பற்றி அண்ணாமலை பாராட்ட, இதை எல்லாம் வெளியே படிக்கட்டில் நின்று ஒட்டு கேட்கின்றார் விஜயா. பிறகு உள்ளே வந்து அண்ணாமலையும் விஜயா பேசுவார்கள் என எதிர்பார்க்க அண்ணாமலை எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று விடுகின்றார்.

இதை தொடர்ந்து முத்து சொன்னது போல மீனா பூரி கிழங்கு மசாலாவையும் செய்ய, பூரிப்பில் ரொம்ப சந்தோஷமா இருக்கா போல அதான் பூரி செஞ்சிட்டு இருக்கியா என விஜயா கேட்கின்றார். மேலும் அண்ணாமலையிடம் இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கியா என கோபப்படுகிறார்.

இதை அடுத்து மீனா ரோகினியை சாப்பிட கூப்பிட அவர் வெளியே சாப்பிடுவதாக சொல்லுகிறார். ஆனால் மனோஜ் பூரியை பார்த்ததும் இங்கேயே சாப்பிடலாம் என்று சொல்ல, ரோகிணி விஜயாவையும்  கூப்பிட்டு வந்து சாப்பிட உட்கார வைக்கின்றார். இதனால் அண்ணாமலை பிறகு சாப்பிடுகிறேன் என எழுந்து போகின்றார்.


அதன்பின் அண்ணாமலை வெளியே போவதாக முத்து மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப, விஜயா வருத்தப்பட்டு சாப்பிடாமல் எழுந்து  கொள்ளுகின்றார். அதன்பின் ஸ்ருதி வேலைக்கு கிளம்ப மீனா வீட்டில் நடந்த பிரச்சனைகளை உங்கள் வீட்டில் சொல்ல வேண்டாம் என சொல்ல, ரூமுக்குள் இருந்து இதைக் கேட்ட விஜயா மீனா நல்லது பண்ணுறாளா?  இல்ல நடிக்கிறாளா? என  யோசிக்கின்றார்.

இதையடுத்து மனோஜ் கடைக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட திருடின சாமான்களை இவர்கிட்ட தான் வித்திருக்காங்க. ஒரு லட்சம் ரூபாய் சாமான் வாங்கி இருக்காரு. அந்த பொருட்களை எல்லாம் தாரார். ஆனா அவருக்கு ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்ல, மனோஜ் அதிர்ச்சி அடைகின்றார். ரோகிணி வேறு வழியில்லாமல் அந்த பணத்தை தந்து விடுகின்றோம் என சொல்லுகின்றார். பணத்திற்கு என்ன செய்வது என்று கேட்க, ஜீவா கொடுத்த பணத்துல மிச்சம் இருக்கிறதுல முத்துக்கு ரெண்டு லட்சம் கொடுத்துட்டு இவருக்கு ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று சொல்லுகின்றார்.

இறுதியாக அண்ணாமலை புத்தகத்தை தட்ட அதிலிருந்து வந்த தூசியால் இருமுகின்றார். விஜயா உடனே தண்ணி எடுத்து வந்து கொடுக்கவும் அதை வாங்க மறுத்து டைனிங் டேபிளில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார். இதனால் விஜயா கோபப்பட்டு ரூமுக்கு சென்றுவிட அண்ணாமலை சோபாவில் இருந்து யோசிக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement