• Apr 23 2026

கில்லி படத்தை தியேட்டரில் புகுந்து நிறுத்திய போலீசார்! ரசிகர்களை கூண்டோடு தூக்கிய அதிரடி வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. இந்த திரைப்படம் தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ரீ ரிலீசாகி உள்ளது.

உலக அளவில் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் இதுவரையில் 15 கோடி மட்டும் வசூலிட்டி உள்ளது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் எதுவுமே வசூலில் ஹிட் அடிக்காத நிலையில், தற்போது விஜய் நடித்து வெளியான கில்லி  திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


குறிப்பாக மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற இடங்களில் விஜயின் படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.


இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் ரீ ரிலீஸ் ஆன கில்லி படத்தை பார்த்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வந்துள்ளார்கள். ஆனால் இந்த கொண்டாட்டம் எல்லை மீறியதன் காரணமாக அங்கு வந்த போலீசார் ரசிகர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்  சென்றுள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு திரையிடப்பட்ட படமும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement