• Apr 18 2026

திரையரங்கில் பட்டையை கிளப்பும் "மங்காத்தா" ரீ-ரிலீஸ்... இயக்குநர் வெளியிட்ட பதிவு வைரல்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் ஒரு படம் என்றால் அது தல அஜித்தின் மங்காத்தா. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவுக்கே ஒரு மைல் கல்லாக அமைந்தது. முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடத்தில் அஜித் நடித்த முதல் படம் என்ற பெருமையுடன், வெளியான நாளிலிருந்தே மங்காத்தா ஒரு பிளாக்பஸ்டர் கல்ட் கிளாசிக் ஆக மாறியது.


15 ஆண்டுகள் கழித்து, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று (23.01.2026) மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் என்றாலே சமீப காலமாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மங்காத்தா அதைவிட ஒரு படி மேலே சென்று சாதனை படைத்துள்ளது.

ரீ ரிலீஸுக்கு முன்பே மங்காத்தா படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான தகவலின்படி, ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ.4.15 கோடி என கூறப்படுகிறது. இது ஒரு ரீ ரிலீஸ் படத்துக்கான வசூலில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மங்காத்தா ரீ ரிலீஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அடுத்த சில நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மங்காத்தா படத்தில் அஜித்துடன், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இந்த நிலையில், மங்காத்தா ரீ ரிலீஸை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தனது பதிவில், “இன்றிலிருந்து மங்காத்தாவை மீண்டும் அனுபவிக்க நேரம் வந்துவிட்டது. தயவுசெய்து Climax சொல்லி அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement