பிரபல நடிகர் சத்தியராஜின் மகன் சிபி சத்யராஜ் தனது சினிமா கேரியரில் பல படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது "டென் ஹவர்ஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகி உள்ளது. இதனை பிரபல இயக்குநர் வெளிட்டுள்ளார். இந்த டெய்லர் தற்போது வைரலாகி வருகிறது.
சிபிராஜ் நடிப்பில் வெளியான "வட்டம், மாயோன். கபடதாரி. வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்கு டேட் புக் செய்து வருகிறது. தற்போது அந்த லிஸ்டில் "டென் ஹவர்ஸ்" திரைப்படமும் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thanks a ton for sharing Dear Sir! All the best and eagerly looking forward for #Coolie ! 😊❤️👍🏻 https://t.co/8bCnnWqsKg
Listen News!