சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா முத்துவிடம் க்ரிஷின் பாட்டியை பார்த்ததையும் உண்மையிலேயே அவருடைய மகள் வெளிநாட்டில் இல்லை இங்கே தான் இருக்கின்றார் என்றும் தனது சந்தேகத்தை சொல்லுகின்றார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகிணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கின்றது.
இன்னொரு பக்கம் அருண் சீதாவிடம் செல்வம் வேண்டும் என்று தன்னுடன் தகராறு பண்ணுவதாகவும் அவருடைய மச்சான் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாகவும் வேண்டும் என்று செல்வம் மீது பழி போட்டு கதைக்கின்றார். இதை கேட்ட சீதா, நீங்கள் யாரையும் பார்க்க வேண்டாம். உங்களுடைய கடமையை செய்யுங்கள் என்று சொல்லுகின்றார். ஆனாலும் அருண் நான் உனது மாமாவுக்காக தான் பார்க்கின்றேன் என்று பக்குவமாக கதைக்கின்றார். இதை சீதாவும் நம்பி விடுகின்றார்.
இதை தொடர்ந்து இந்த விஷயம் முத்துவுக்கு தெரிய வருகிறது. அதன் பின்பு முத்து நேரா சீதாவிடம் வந்து, உன் புருஷன் என்பதற்காக தான் பார்க்கின்றேன். ஆனால் அவர் என் மீது இருக்கும் கோபத்தை எனது நண்பர்கள் மீது காட்டுகின்றார். அப்படி செய்ய வேண்டாம் என்று சொல்லு என சொல்லிச் செல்லுகின்றார்.
இறுதியாக க்ரிஷ் ஸ்கூலில் இருந்து தன்னைக் கூட்டிப் போகுமாறு அடம்பிடிக்கின்றார். இதனால் மகேஷ் ரோகிணிக்கு கால் போட்டு மூன்று பேரும் கான்ஃபிடன்ஸ் காலில் கதைக்கின்றார்கள்.
இதன் போது நான் இங்கே இருக்க மாட்டேன் என்ன வந்து கூட்டிட்டு போ என்று ரோகிணிக்கு க்ரிஷ் சொல்லி அடம்பிடிக்க, ரோகிணி இறுதியில் நீ அங்கே இருக்காவிட்டால் நானும் பாட்டி போல காணாமல் போய்விடுவேன் என்று சொல்லுகின்றார். இதனால் நீ எங்கேயும் போக வேண்டாம் என் கூடவே இரு நான் இந்த ஸ்கூல்லயே இருக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டு செல்கின்றார் க்ரிஷ். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!