பன்முக சிறப்பாளரான டி.ராஜேந்தர், தனது புதிய திரைப்பட நிறுவனம் டி.ஆர். டாக்கீஸ் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்க இருக்கிறார். அதன் தொடக்கமாக, அவரது ரசிகர்களின் நினைவில் நீங்கா திரைப்படமான "உயிருள்ளவரை உஷா" செப்டம்பர் மாதம் 4K மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரையரங்குகளுக்கு வருகிறது!
இத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கங்கா, எஸ்.எஸ். சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள். புதிய இசை அமைப்புடன், புத்துணர்வோடு திரையில் உயிர் பெறும் இந்த படம், nostalgiya-வை உயிருடன் கொண்டு வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல், "மைதிலி என்னை காதலி", "ஒரு தலை ராகம்", "என் தங்கை கல்யாணி", "காதல் அழிவதில்லை" (டி.ஆர். சிலம்பரசன் அறிமுக படம்), "சரவணா", "இது நம்ம ஆளு", "மோனிஷா என் மோனலிசா", "சொன்னால் தான் காதலா", "எங்க வீட்டு வேலன்" போன்ற டி.ஆர்.-இன் வெற்றி திரைப்படங்களும் விரைவில் டிஜிட்டல் முறையில் திரும்ப வருகின்றன.
இந்த பெரும் முயற்சியின் புரொமோஷனுக்காக டி.ஆர். டாக்கீஸ் விரைவில் தனது சொந்த யூடியூப் சேனலையும் துவக்க இருக்கிறது, இதில் ரீமாஸ்டர்ட் புரொமோக்கள், ஸ்பெஷல் வீடியோக்கள், இசை வெளியீடுகள் என பல தகவல்கள் வெளியிடப்படும்.
Listen News!