• Aug 21 2025

கல்யாணத்துல என்ன ஃபேக் மேரேஜ்.? ஹீரோயின்ட கூட உண்மைய சொல்லல.. S.Ve.Shekher அதிரடி பேட்டி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

கலைஞர் தொலைக்காட்சியில்  சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் தான் மீனாட்சி சுந்தரம். கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் வெறும் 4 மாதங்களுக்குள்ளேயே முடிவுக்கு வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. 

மீனாட்சி சுந்தரம் என்ற தொலைக்காட்சி தொடரில் மூத்த நடிகர் ஆன எஸ்.வி. சேகர் மற்றும் விஜய் டிவி பிரபல நடிகை ஆன ஷோபனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைகளைக் கொண்ட இந்த தொடர் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். 

இந்த தொடர் எதிர்பாராத விதமாக வெகு விரைவாகவே முடிவுக்கு வந்துள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து,  ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று ஒளிபரப்பாகும் இறுதி அத்தியாயத்துடன் மீனாட்சி சுந்தரம்  தொடர் முடிவுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இந்த  மீனாட்சி சுந்தரம் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான  எஸ்.வி சேகர்  தனியார் ஊடகம் ஒன்று அளித்தபடி பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், இந்த சீரியலின் கதை பற்றி ஹீரோயின் கிட்டயே கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று  ஒழுங்கான உண்மை கதையை தெரிவிக்கவில்லை.. ஃபேக் மேரேஜ்  என்று சொன்னாங்க.. கல்யாணத்துல என்ன ஃபேக் மேரேஜ்? 


என்ன விட நாற்பது வயசு சின்ன பொண்ணு. அந்த பொண்ணு கிட்ட கூட  தாலி கட்டுறத பத்தி சொல்லல. .  சினிமால தான் பொய்  கதையை சொல்லி ஆர்டிஸ்ட்ட உள்ள இழுப்பாங்க ஆனா  டெலிவிஷன்ல ஏன் அப்படி பண்றாங்க ?  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வேண்டுமென்றால் அது செட் ஆகும். ஆனால் நான் வேறு..  நான் டிராமா சூப்பர் ஸ்டார் மட்டுமே..

ஆனாலும் அந்த பொண்ணு என்னுடைய படங்களை பார்த்து இருக்கா இல்லையா என்று தெரியாது.  அந்த பொண்ணும் அவருடைய அம்மாவும் என்னுடைய மிகப்பெரிய பேன்ஸ் என்று சொன்னார்கள்.

கடைசில நானும் அந்த பொண்ணு கூட பேசி  நானும் உனக்கு தாலி கட்டல.. நீயும் எனக்கு கழுத்து நீட்டல.. இது ஒரு ஆக்சிடென்ட் போல எடுப்போம் என்று அந்த சீன் எடுக்கப்பட்டது என  தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த சீரியல் 100 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது மிகப்பெரிய வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement

Advertisement