தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தனது அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்கியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற "தமிழக வெற்றிக் கழகம்" (TVK) மாநில மாநாடு, அவரது அரசியல் புள்ளிவிவரங்களில் முக்கியமான கட்டமாக அமைந்தது.
அந்த மாநாட்டில் விஜய் கதைத்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் "தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல நான் தோன்றியிருக்கிறேன்" என்றபடி தன்னை கூறியதாக பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.
இந்த பேச்சை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதன்போது அவர், "தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார்.அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் அவர்களை குறிப்பிடுகிறார். ஆனால் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை." என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!