• Aug 21 2025

குமாரின் நிலையைப் பார்த்து பதறும் ராஜி..! வேதனையில் பித்துப் பிடித்து தவிக்கும் மயில்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வடிவு குமாரை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்ப குமார் சோகமாக இருக்கிறார். அதைப் பார்த்தவுடனே வடிவு ஏன் உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேட்கிறார். பின் வடிவு அத்தையைப் பார்த்து இவன் ஏன் அத்த இப்புடி இருக்கிறான் என்று கேட்க்கிறார். அதைக் கேட்ட வடிவோட அத்த நீ அவனை நினைச்சு கவலைப்படாத அவன் சரியாகிடுவான் என்று சொல்லுறார்.

இதைக் கேட்ட ராஜி ரொம்ப கவலைப்படுறார். அதைப் பார்த்த மீனா என்ன அண்ணாவ நினைச்சு பீல் பண்ணுறீயா என்று கேட்க்கிறார். பின் ராஜி அவன் இப்ப இருக்கிற நிலைமையை பார்த்தால் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா அவன் இனிமேல் திருந்திடுவான் என்கிறார். இதனைத் தொடர்ந்து கோமதி மயிலைப் பார்த்து இனி எல்லாரும் எங்க குழந்தையைக் காணோம் என்று கேட்கப்போகினம்என்கிறார்.


அதைக் கேட்ட மயில் அழுதுகொண்டு அங்கிருந்து போறார். பின் மீனா கோமதியைப் பார்த்து ஏன் அத்த இப்புடி எல்லாம் கதைக்கிறீங்க என்று கேட்க்கிறார். இதனை அடுத்து ராஜி குமரைப் பார்த்து எப்புடி இருக்கிற என்று கேட்க்கிறார். மேலும் எதுக்காக நீ பழி வாங்கணும் என்ற எண்ணத்தில உன்ர வாழ்க்கையை ஏன் வீணாக்குற என்று கேட்க்கிறார். அதைக் கேட்ட குமார் எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். 

அதைப் பார்த்த சக்திவேல் குமார் கிட்ட நீயும் இவளோட திருட்டுத் தனமா கதைக்கிறியா என்று கேட்க்கிறார். இதனை அடுத்து மயில் வீட்ட வந்து எல்லா விஷயத்தையும் சொல்லி அழுகிறார். அதைக் கேட்ட மயிலோட அம்மா எப்புடியாவது அவரை உன்ர வழிக்கு கொண்டு வா என்று சொல்லுறார். பின் மயில் பாண்டியனோட கடையில போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement