• Dec 26 2024

முதன் முதலாக தங்களின் மகளுடைய முகத்தை உலகிற்கு காட்டிய ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிகள்- செம கியூட்டாக இருக்கிறாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிகள்.நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு 2022 நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராஹா கபூர் என பெயரிட்டு இருக்கின்றனர்.ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த ஒரு வருடமாக மகள் போட்டோவை வெளியிடாமல் தான் இருந்தனர்.


இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் மகள் ராஹா உடன் ரன்பீர் மற்றும் ஆலியா போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.முதல் முறையாக ராஹாவின் முகத்தைகாட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement