• Sep 17 2026

பிக் பாஸ் தொகுப்பாளர்களின் சம்பளம் இத்தனை கோடியா? கேட்கவே தலை சுற்றுதே...

shali / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் தங்கி, டாஸ்க், சண்டை, காதல், அழுகை என பல்வேறு உணர்வுகளுடன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வார இறுதி மட்டும் வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலங்களின் சம்பளம் குறித்து வெளியாகும் தகவல்கள் தற்பொழுது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் முதல் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 7-வது சீசனுக்காக அவருக்கு சுமார் ரூ.130 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பிறகு களமிறங்கிய விஜய் சேதுபதிக்கு 8-வது சீசனில் சுமார் ரூ.60 கோடி சம்பளம் கிடைத்ததாகவும், அடுத்தடுத்த சீசன்களில் அது ரூ.75 முதல் ரூ.80 கோடி வரை உயர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


தெலுங்கு பிக் பாஸில் நாகார்ஜுனாவின் சம்பளம் ஆரம்பத்தில் ரூ.10 கோடி அளவில் இருந்து, தற்போது ரூ.30–35 கோடி வரை உயர்ந்ததாக தகவல். மலையாளத்தில் முதல் சீசனிலிருந்தே தொகுப்பாளராக இருக்கும் மோகன்லாலுக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.30 கோடி கிடைப்பதாக கூறப்படுகிறது.

கன்னட பிக் பாஸின் முகமாக இருக்கும் கிச்சா சுதீப்புக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.20 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அனைவரையும் மிஞ்சும் வகையில் ஹிந்தி பிக் பாஸ் தொகுப்பாளர் சல்மான் கானுக்கு ஒரு சீசனுக்கு சுமார் ரூ.200 கோடி வரை சம்பளம் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement