• Dec 26 2024

எனக்கும் இதேதான் நடந்துச்சு! அந்த லிஸ்ட்ல அடுத்தது மணிமேகலைத்தான்! விஜே- பாவனா...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அத்துடன் மணிமேகலையும்  தனது கணவரும் இணைந்து சொந்தமாகவே youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்கள். அதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கின்றது எனவும் கூறப்படுகிறது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக திகழ்ந்து வருகின்றார்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி உள்ளார் மணிமேகலை. இது தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். CWC 5ல் இருந்து வெளியேறுகிறேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளினி ஆதிக்கம் செலுத்தினார். அவர் நிகழ்ச்சியின் சமையல்காரராக இருக்க வேண்டும், ஆனால் அவர் அதை அடிக்கடி மறந்துவிடுவார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார்.


நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்தப் பருவத்தில் குற்றமாகிவிடும். இதற்கு முன் இருந்து சீசன்களை முற்றிலும் தாண்டி இது ஆதிக்கம் செலுத்தும் சீசனாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதன் தன்மையை இழந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே பாவனா.


பிரியங்கா வந்ததற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது என முன்னைய விடீயோக்களில் பாவனாவும் கூறியிருந்தார். இந்நிலையில் பிரியங்காவால் பாதிக்கப்பட்ட லிஸ்ட்டில் தற்போது மணிமேகளையும் சேர்ந்துவிட்டார் எனவும் கேட்க்கனவே அந்த லிஸ்ட்டில் அனிதா சம்பத், பரீனா, நட்சத்திரா, ஜேக்குலின், சங்கீதா, பவித்ரா, பவனா என்போர் இருக்கிறார்கள். ப்ரியங்கா சிறந்த தொகுப்பாளினிதான் ஆனால் அவர் வந்த பிறகு மற்றய தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது உண்மை என்று தற்போது சோசியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர்.      





Advertisement

Advertisement