• Dec 28 2024

விஜய் டிவி பிரபலங்களின் இன்ஸ்டா ஸ்டேட்டஸில் இடம்பிடித்த செருப்பு.. நீங்களே பாருங்க..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை - பிரியங்காவின் பிரச்சனை தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் கடும் பேசுப் பொருளாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை அதிரடியாக விலகியிருந்தார். ஆனால் இதற்கு காரணம் ஒரு தொகுப்பாளினி என குறிப்பிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அது பிரியங்கா தானே என அவருக்கு எதிராக தமது வெறுப்புகளை கொட்டி தீர்த்து வருகின்றார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5ல் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை. மணிமேகலை கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம் என்று தனித்தனியாக வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அதனையும் கேலி பண்ணிய  மணிமேகலை, பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணியவர்களை சொம்பு என விமர்சித்திருந்தார்.

இந்த பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் பிரியங்கா தரப்பில் இருந்து எந்த விதமான ரியாக்ஷனும் வெளி வரவில்லை. மணிமேகலை தான் மாறி மாறி தனது பதிவுகளை பதிவிட்டு கொண்டு வருகின்றார்.


இந்த நிலையில், விஜய் டிவி பிரபலங்களான மாகாபா மற்றும் மிஸ்டர் பிளாக் ஆகியோர் தமது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் இல் செருப்பு, தொடப்பம் கட்டை ஆகியவற்றை வைத்துள்ளார்கள்.

இதற்குப் பின்னணியில் ஒரு வேலை மணிமேகலை இருக்கலாம். அவர் பிரியங்காவின் ஆதரவாளர்களுக்கு சொம்பு என சொல்வதும் தொடர்ந்து அவருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வரும் நிலையிலும் தற்போது மாகாபா மறைமுகமாக அவருக்காக செருப்பை பதிவிட்டு இருக்கலாம்.



Advertisement

Advertisement