• Dec 26 2024

சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன சீக்ரெட்! உண்மையை உடைத்த சிவகுமார்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்பவர் தான் சிவகுமார். அவருடைய பிள்ளைகளான சூர்யா, கார்த்திக் ஆகியோரும் முன்னணி நடிகர்களாக காணப்படுகின்றனர்.

அந்த காலத்தில் நடிகர் சிவகுமார் தனது நடிப்பாற்றலால் கதாநாயகிகளின் முன்னனி ஹீரோவாகவும், பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் விளங்கியவர். நடிப்பு மட்டுமல்லாது ஓவியம், சொற்பொழிவு, இலக்கியம் என பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகுமார், தனது மகனும், நடிகருமான சூர்யாவின் சினிமா வாழ்க்கைப் பற்றி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், சூர்யா 1991-ம் வருடங்களில் சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.


அப்போது இவரின் ஜாதகத்தையும், கார்த்தியின் ஜாகத்தையும் சிவக்குமார் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் தனது மகன்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.

சூர்யாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், இவர் பிற்காலத்தில் உங்களைப் போன்று திரைத்துறையில் அடியெடுத்து வைப்பார். மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவிப்பார். உங்களை விட அதிக, பணமும் புகழும் சேர்ப்பார் என்று கூறியிருக்கிறார்.


மேலும் காதல் திருமணம் தான் செய்வார் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சிவக்குமாருக்கு இதில் சந்தேகம். ஏனெனில் 10 வயது வரை சரியாகப் பேசத் தெரியாத சூர்யா பின்னாளில் எப்படி நடிகராக வருவார் என்று யோசித்திருக்கிறார்.


ஆனால் ஜோதிடர் சொன்னது போலவே சூர்யா இயக்குநர் வஸந்த் எடுத்த நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து பின்னர் படிபடியாக முன்னனி நட்சத்திரமாக மாறினார். 

மேலும் மாயாவி படத்தின் போது நடிகை ஜோதிகா மீது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணமும் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அந்த ஜோதிடர் சொன்னது போல் இன்று அவ்வாறே நடந்திருப்பதை சிவக்குமார் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 


Advertisement

Advertisement