• Dec 28 2024

அடேங்கப்பா...!! விடுதலை நாயகனை சந்தித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. இப்படியொரு நட்பா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.  இந்த சீரியலில் முத்துவாக வெற்றிவசந்தும்,  மீனாவாக கோமதி பிரியாவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் கடை முதலாளியாக காணப்படுகின்றார். இதைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் கடைக்கு போகாமல் நன்றாக தூங்குகின்றார். இதனால் முத்து அவரை தண்ணி எடுத்து ஊத்தி எழுப்புகின்றார்.

மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா சுதா, அண்ணாமலை குடும்பத்தை பிரிப்பதற்காக மனோஜ் கடையில் வாங்கிய ஏசியை ரிட்டர்ன் பண்ணுகிறார். அது மட்டும் இன்றி முத்து பற்றியும் நன்றாக ஏத்தி விடுகிறார்.


இந்த நிலையில், தற்போது இந்த சீரியலில் செல்வம் கேரக்டரில்  நடிக்கும் பழனியப்பன், பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் சூரி உடன் இணைந்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது விடுதலை படத்தில் நடித்து நாயகனாக என்ட்ரி  கொடுத்தவர் தான் நடிகர் சூரி. தற்போது அவருடன் பழனியப்பன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ,



Advertisement

Advertisement