• Dec 26 2024

கணவரை கண்கலங்க வைத்த சீரியல் நடிகை! எப்படி தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நட்சத்திரா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து கலர்ஸ்டிவியில் வள்ளி திருமணம் என்னும் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.வள்ளி - கார்த்திக் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். 


இவர் சில நாட்களுக்கு முன்பு தனது காதலான விஸ்வாவை மலையாள முறைப்படி திருமணம் செய்து கொண்டார். நட்சத்திராவின் தாத்தா உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருப்பதால் இந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. 

இந்த நிலையில், தற்போது தனது கணவரின் பிறந்த நாளுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார் நட்சத்திரா.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதோடு, பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement