• May 28 2026

பாண்டியன் கண்ணில் மண்ணைத் தூவி அஞ்சலியைச் சந்தித்த சரவணன்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியை வெளியில சாப்பிட போவமோ என்று கேட்க, ராஜி இனிமேல் டயட் சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்லுறார். மேலும், 3 மாசத்துல பிட்டாகி காட்டுறேன் என்கிறார் ராஜி. அதனை அடுத்து, ரெண்டு பேரும் பழங்கள் சாப்பிடுவதற்காக பைக்கில கிளம்பி போகிறார்கள். மறுபக்கம், காந்திமதி அரிசியையும் குமாரையும் சேர்த்து வைக்க பிளான் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

அதனை அடுத்து சரவணன் வேலையை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டிருக்கிறதைப் பார்த்த பாண்டியன் பேசுறார். பின் சரவணன் பாண்டியனைப் பார்த்து நான் கோவிலுக்கு டெலிவரிக்கு போய்ட்டு வாறன் என்று சொல்லிட்டு கிளம்புறார். அதைப் பார்த்த பாண்டியன் சந்தேகப்படுறார். 


அதனை அடுத்து பாண்டியன் பழனியை கடையில விட்டிட்டு தனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லிட்டு கிளம்புறார். சரவணன் டெலிவரி முடிச்சிட்டு அஞ்சலி கூட கோவிலில கதைச்சுக் கொண்டிருக்கிறார். அப்ப சரவணன் என்ர மனசில இருக்கிறதை எல்லாம் சொல்லுறதுக்கு ஒரே ஆள் நீதான் என அஞ்சலியைப் பார்த்துச் சொல்லுறார்.

அந்த நேரம் பார்த்து பாண்டியனும் அங்க போய் நிற்கிறார். ஆனாலும், பாண்டியன் சரவணனை பார்க்க முன்னம் அவர் அங்கிருந்து கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement