தமிழ் சின்னத்திரை உலகிற்கு கடும் சோகத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகர் பிரபாகரன் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது மரணச் செய்தி சீரியல் ரசிகர்கள் மற்றும் சின்னத் திரை பிரபலங்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரன் தனது நடிப்பின் மூலம் ஜீ தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியிருந்தார்.
அவருடைய குழந்தைத் தனமான சிரிப்பு மற்றும் நடிப்பு என்பன ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. அத்தகைய நடிகர் இன்று காலை மரணித்தது அவரது சகநடிகர்கள், ரசிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உண்மையிலேயே கலங்க வைத்துள்ளது.
பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு, பல சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்போது ரசிகர்கள் "உங்கள் நடிப்பு எங்களை சிரிக்க வைத்தது, அழ வைத்தது. இனிமேல் நீங்கள் இல்லாமல் சின்னத்திரை எப்படி இருக்கும்" என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!