• Jun 06 2026

முத்துவேல் கண் திறந்ததும் மாறிப்போன கதை.? தலைதெறிக்க ஓடிய குமார்.. அதிர்ந்த குடும்பம்!"

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், முதத்துவேல் கண் விழித்தால் உண்மையை சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவரின்  கதையை முடிக்க முடிவெடுக்கிறார் குமார் . இதற்காக அவர் முத்துவேலின் அறைக்குள் சென்று, அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவியை முகத்தில் இருந்து அகற்ற முயற்சிக்கிறார். இதை சக்திவேல் பார்த்துவிடுகிறார்.

இதனால் குமார் அமைதியாக அங்கிருந்து வெளியே செல்கிறார். அப்போது, "என்ன நடந்தது?" என்று சக்திவேல் கேட்க, "உங்களிடம் ஒரு உண்மையை மறைத்துவிட்டேன்" என்று குமார் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு போலீசார் வருகின்றனர். இதைப் பார்த்த குமார் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.

அதன் பின்னர் முத்துவேலிடம் என்ன நடந்தது என்று போலீசார் விசாரிக்க, "தன்னை குமார்தான் தள்ளிவிட்டான்" என்ற உண்மையை முத்துவேல் கூறுகிறார். இதைக் கேட்டு சக்திவேல் அதிர்ச்சி அடைகிறார். மேலும், "குமார் மீது புகார் கொடுக்க விரும்புகிறீர்களா?" என்று போலீசார் கேட்க, "அதெல்லாம் வேண்டாம்" என்று முத்துவேல் கூறுகிறார்.


இதையடுத்து முத்துவேலின் குடும்பத்தினரும், பாண்டியனின் குடும்பத்தினரும் அவரைப் பார்க்க வருகின்றனர். அப்போது, "கதிர் இல்லை, குமார்தான் முத்துவேலை தள்ளிவிட்டது" என்று பழனி கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன்பின், "அவசரப்பட்டு என் பிள்ளையை சந்தேகப்பட்டுட்டியே அண்ணா" என்று கோமதி கூறுகிறார்.

வாக்குமூலத்தை அறிந்த பாண்டியன் உடனடியாக போலீஸ் நிலையத்திற்குச் சென்று கதிரை வெளியே எடுக்கிறார். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவரை வரவேற்க வாசலில் கோமதி, ராஜி, அரசி ஆகியோர் காத்திருக்கின்றனர்.

இறுதியாக, குமாரை தேடி தோட்டத்திற்குச் சென்ற சக்திவேல், அங்கு அவரை அடித்து வெளுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement